யாதவர்களை மதிக்காவிட்டால் ..: இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை!
சென்னை:
யாதவ சமுதாயத்தினரை அரசியல் கட்சிகள் மதித்து உரிய பிரதிநிதித்துவம் வழங்காவிட்டால் வருகிற சட்டசபைத் தேர்தலில்வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக முன்னாள் இந்தியன் வங்கித் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையிலானயாதவ மகா சபை எச்சரித்துள்ளது.
முன்னாள் இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தவர் எம்.கோபாலகிருஷ்ணன். இவரது காலத்தில்திரைத் துறையினருக்கும், மற்ற துறையினருக்கும் ஏகப்பட்ட கடன்களை இந்தியன் வங்கி வழங்கியது.
இந்தக் கடன்களில் பெரும்பாலானவை திருப்பிக் கட்டப்படாத காரணத்தால் வங்கியே திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந் நிலையில் யாதவ மகாசபை என்ற அமைப்பின் தலைவராக தற்போது கோபாலகிருஷ்ணன் உள்ளார். சென்னையில்செய்தியாளர்களை சந்தித்த கோபாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் முக்குலத்தோர், வன்னியர்களுக்கு அடுத்து பெரியசாதியாக யாதவ சமுதாயம் உள்ளது.
ஆனால் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியலில் யாதவ சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அரசியல்கட்சிகள் வழங்க முன்வருவதில்லை. தமிழகம் முழுவதும் யாதவ சமுதாயத்தினர் உள்ளனர்.
ஆனால் பெரிய ஓட்டு வங்கியாக அவர்கள் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.ராமநாதபுரம், திருநெல்வேலி, தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் கூலி வேலை செய்தும்,கால்நடைகளை வளர்த்தும் வறுமையான நிலையில் இருக்கிறார்கள்.
யாதவ சமுதாயத்தினரை மிகவும் பிற்பட்டோர் வகுப்பில் சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிராமநாதபுரம் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கவுள்ளோம்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் யாதவ சமுதாயத்தினருக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை வேட்பாளர்களாகநிறுத்த அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தின் சில முக்கிய தொகுதிகளில் எங்களது சமுதாயவேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் கோபாலகிருஷ்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications