7 நாட்களில் தண்டனை: போலீஸுக்கு ஜெ. பாராட்டு
சென்னை:
குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக போலீஸாரை முதல்வர் ஜெயலலிதாபாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி தண்டிக்கப்படுவார்கள்என்ற நம்பிக்கையை பொதுமக்கள் பெறும் வகையில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரியதண்டனையை விரைந்து பெற்றுத் தரவேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக காவல் துறை, தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைத்து குற்றங்களைகண்டுபிடிக்கும் சதவீதத்தை உயர்த்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தந்து சாதனை படைத்து வருகிறது.
முதலில் ஒரு கொலை வழக்கில் 44 நாட்களில் தண்டனை பெற்றுத் தந்து சாதனை படைக்கப்பட்டது. இதன் பிறகு 29 நாட்களில்,17 நாட்களில், 16 நாட்களில், 8 நாட்களில் என குறைந்து இப்போது வெறும் ஏழே நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றுத் தந்து தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு சாதனை படைத்துள்ள சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடராஜுக்கும், தமிழகக் காவல் துறையின் ஏனையஅலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications