வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர்கள் கைது
கோவை:
பொள்ளாச்சி அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை பொதுமக்கள் வளைத்துப்பிடித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தாராபுரம் ரோட்டில் உள்ளது சுந்தரகவுண்டனூர். இங்கு தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கி உள்ளது. இதன் அருகேயே ஒரு ரேஷன் கடையும் உள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக ஒரு கும்பல் வந்தது. அந்தக் கும்பல் ரேஷன் கடை சுவர்மீது ஏறி உள்ளே புகுந்தனர். ரேஷன் கடை சுவரில் துளை போட்டு வங்கிக்குள் நுழைவது என்பது இவர்களது திட்டம்.
கொள்ளைக் கும்பல் ரேஷன் கடை சுவர் வழியே செல்வதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து விட்டனர். உடனே மேலும் சிலஊர் மக்களை அவர்கள் திரட்டினர். ஊரே திரண்டு வங்கியை முற்றுகையிட்டது.
வங்கியின் செயலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரேஷன் கடையைத் திறந்தார். ஆனால் அங்குயாரும் இல்லை. இதனால் ஊர் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனாலும் ரேஷன் கடைக்குள் நன்றாகப் பார்த்த போது சாக்கு மூட்டைக்குள் 3 பேர் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. உடனேபொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்களது பெயர் சதீஷ் (வயது 30), செந்தில் குமார்(வயது 20), சிலம்பரசன் (வயது 20) என தெரியவந்தது. இவர்களில் செந்தில் குமார், சதீஷ் ஆகிய இருவரும் கோவையிலுள்ளஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜினீயரிங் மாணவர்களே வங்கியிகல் கொள்ளையடிக்கமுயன்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications