சேது: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது- டி.ஆர். பாலு
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர்.பாலு கூறினார்.
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கவலை தெரிவித்திருந்தார்.
இந்தியாவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இறுதிக்கட்ட முயற்சியாக சர்வதேச நீதிமன்றத்தை இலங்கை அணுகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை நிபுணர்கள் 2முறை இந்தியா வந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தி சேது திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்துவைத்தோம்.
சேது கால்வாய் திட்டம் இலங்கைக்கு பாதகமாகவோ, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவோ இருக்கும் என்றுகருதவில்லை. இந்திய எல்லைக்குள் சேது கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களின் கருத்துக்களைகேட்ட பிறகே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கோ, இலங்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் பாலு.
இதற்கிடையே இலங்கையிலிருந்து நிபுணர் குழு விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து பேச்சுநடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications