சென்னையில் 4 தமிழ் தீவிரவாதிகள் கைது
சென்னை:
நான்கு கொலை வழக்கு, ஒரு கொள்ளை வழக்கு ஆகியவற்றில் தொடர்புடைய 4 தமிழ் தீவிரவாதிகளை சென்னையில்போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நகரில் கஞ்சா கும்பல்களைப் பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்துதனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா கும்பல் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்று முற்றுகையிட்டனர்.
இதில் அந்த வீட்டில் பதுங்கியிருந்த பெரம்பலூர் செல்வம், கடலூர் ஜெயவேல், மயிலாடுதுறை நடராஜன் மற்றும்சென்னையைச் சேர்ந்த பிரகாசம் ஆகியோரை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர்களிடம் கஞ்சா எதுவும் பிடிபடவில்லை. இருப்பினும் அவர்கள் நான்கு பேரும் தமிழ்அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அரிவாள் போன்ற ஆயுதங்களை அவர்கள்வைத்திருந்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியபோது, நான்கு பேருக்கும் 4 கொலை வழக்குமற்றும் 1 கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், சிதம்பரம் நீதிமன்றத்தில் இன்றுஆஜர்படுத்தப்படவுள்ள சந்திரன் என்பவரைக் கொலை செய்யும் திட்டத்தையும் அவர்கள் தீட்டியிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications