சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் ஒருவர் கூறியதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
லண்டனில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் விமான நிலையங்கள் உட்பட முக்கியபகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சென்னையிலுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு நேற்று ஒருபோன் கால் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெட் விமான நிறுவன அதிகாரிகள் இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலையஅதிகாரிகளுக்கு கூறினர். இதைத் தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து விமானநிலையத்தில் சோதனையிட்டனர்.
ஆனால் வெடி குண்டு எதுவும் சிக்காததால், அந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. இருப்பினும் சென்னை விமானநிலையம் ஏற்கனவே தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் உள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் செல்லும் அனைத்துப் பயணிகளும், பார்வையாளர்களும் கடுமையான சோதனைக்கு பின்னரேஅனுமதிக்கப் படுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications