டிடிவி தினகரனுக்கு கைது வாரண்ட்: பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் எம்.பிக்கு பெங்களூர் தனி நீதிமன்றம், இன்று ஜாமீன் இல்லாத கைது வாரண்ட்பிறப்பித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உட்பட 5 பேர் மீதான சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குஆகியவை ஒரே வழக்காக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை நீதிபதி பச்சாப்பூரே விசாரித்து வருகிறார். கடந்த 2ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடந்த போதுஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள நகைகள், பொருட்கள் மற்றும் ஆவணங்களை பெங்களூர்நீதிமன்றத்திற்கு மாற்றும்படி நீதிபதி பச்சாப்பூரே உத்தரவிட்டார். பின் விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்துஉத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிடிவி தினகரன், கடந்த 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிஉத்தரவிட்டிருந்தார். ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை.

இந் நிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும், டிடிவி தினகரனின் வழக்கறிஞர் ஜீனசேனன்,தினகரன் நேரில் வர 18ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கும் படி கேட்டார்.

ஆனால் அதற்கு மறுத்த நீதிபதி பச்சாப்பூரே, வருகிற 16ம் தேதிக்குள் தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறிஜாமீனில்லாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின் வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+