வள்ளுவரை உலகம் அறிய வேண்டும்: கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வான்புகழ் திருவள்ளுவரையும், திருக்குறளின் மகத்துவத்தையும் உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச திருக்குறள் மாநாடு வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி அப்துல் கலாம் வாழ்த்துச் செய்திஅனுப்பியுள்ளார். அதில் பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், கன்பூஷியஸ் அளவுக்கு திருவள்ளுவரையும் உலகம் புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கலாமின் செய்தி: திருவள்ளுவர், கம்பர், அவ்வையார், இளங்கோவடிகள் போன்றோர், தங்களது எழுத்துக்கள், நல்லொழுக்கம்,வாழ்க்கை ஆளுமை ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு மிகப் பெரும் சேவை செய்துள்ளனர். ஆனால் இவர்களை நாம்மட்டும் தான் அறிந்து வைத்திருக்கிறோம்.

மேற்கத்திய சிந்தனையாளர்களுக்கு இவர்களை தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. இந்த நிலை அகல வேண்டும்.மேலை நாட்டுச் சிந்தனையாளர்களும், இந்த சிந்தனையாளர்களை அறிந்து கொள்ள வேண்டும். திருக்குறளைப் போல மிகஎளிமையான தத்துவம் உலகில் எங்குமே காண முடியாது.

மிகச் சிறந்த சிந்தனாவாதி திருவள்ளுவர். அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், கன்பூஷியஸ், பிளாட்டோ ஆகியோருக்கு சற்றும்குறையாதவர் திருவள்ளுவர். இஸ்ரோவில் நான் முன்பு பணியாற்றியபோது, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வடிவமைக்க ஒருதிருக்குறள் தான் எனக்கு உந்து சக்தியாக இருந்தது.

அந்த அளவுக்கு சிந்தனையைத் தூண்டுவதாக, உத்வேகம் அளிப்பதாக திருக்குறள் விளங்குகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம்போன்ற தமிழின் இலக்கிய வளம் மிக்க படைப்புகள் அனைத்தும் உலகெங்கிலும் அறியப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+