குற்றவியல் சட்டம்: சிவராஜ் பாட்டீலுடன் வழக்கறிஞர்கள் சந்திப்பு
டெல்லி:
தமிழக வழக்கறிஞர்கள், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போதுஅவர் குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்றுஉறுதியளித்தார்.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில், வழக்கறிஞர்கள்திங்கள்கிழமை இரவு திடீரென கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.
அவர்களிடம் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், பிரதமரை சந்தித்து பிரச்சினைகளை விளக்குமாறும், அதற்குமுன்பாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுமாறும் கருணாநிதி கோரினார்.
ஆனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் முதலில் சந்தித்து விட்டு அதன் பின்னர் முடிவு எடுப்பதாக பிரபாகரன்,கருணாநிதியிடம் தெரிவித்தார்.
இந் நிலையில் பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்கள் முகமது கெளஸ், செல்வம், வேல் முருகன், சரவணன் ஆகியோர் இன்றுகாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். பின் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ரகுபதி, வேங்கடபதி மற்றும் காங்கிரஸ் எம்பி.கார்வேந்தன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரபாகரன் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைசட்டத்திருத்தங்களில் 40ல் 9 திருத்தங்கள் மக்களுக்கு விரோதமானவை. இதில் 20 திருத்தங்களை திரும்பப் பெறவேண்டும்என்று கூறினோம்.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பாட்டீல், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இவை நிறைவேற்றப்பட்ட போதிலும்எங்களது கோரிக்கைளை பரிசீலிப்பதாக கூறினார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications