எம்ஜிஆர் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது: விஜயகாந்துக்கு திரு. நறுக்!
சென்னை:
நடிகர் விஜயகாந்த், எம்.ஜி.ஆர். பெயரை சொல்வதன் மூலமோ அல்லது அவரது படத்தை பயன்படுத்துவதன் மூலமோமக்களை ஏமாற்ற முடியாது என்று பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த செல்வாக்கு, புகழ் எல்லாமே மக்கள் அவருக்குக் கொடுத்தது. யாருடைய பெயரைச் சொல்லியும்எம்.ஜி.ஆர். புகழ் பெறவில்லை. முதல்வர் பதவியை அவர் கேட்கவில்லை, ஆனால் மக்களாக கொடுத்தார்கள்.
எம்.ஜி.ஆர். அமரராகி விட்டார். எனவே அவரது பெயரை, படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால்அவரது பெயரை சொல்வதன் மூலமோ அல்லது படத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ எம்.ஜி.ஆர். போல ஆகி விடமுடியாது.
இதை விஜயகாந்த்தும் புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரின் வாரிசாக யாரும் மாறி விட முடியாது. வக்கீல்கள்,டாக்டர்கள் அரசியலில் இருப்பது போல நடிகர்களும் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியல் நடத்தலாம்.
எனவே சக அரசியல்வாதி என்ற முறையில் விஜயகாந்த்தை நான் வரவேற்பேன். விஜயகாந்த் ஆரம்பிக்கப் போகும்கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று பாஜகவினர் கூறவில்லை. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவுசெய்வோம்.
மதுரையில் நடந்த சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா அரசு விழாவே அல்ல. அது கூட்டணிக் கட்சிகளின் விழாவாகத் தான்இருந்தது.
காவிரியைப் பொருத்தவரை, கர்நாடக அரசு உபரி நீரைத் தான் திறந்து விடுகிறது. எனவே இதனை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட திமுக தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பொறுப்புதிமுகவுக்குத் தான் அதிகம் உள்ளது என்றார் திருநாவுக்கரசர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications