தாதா வீரமணியின் தங்கை கஞ்சா வழக்கில் கைது
சென்னை:
சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல தாதா வீரமணியின் தங்கை கிரிஜா, கஞ்சா வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டார்.
இவனது தங்கை கிரிஜா. 30 வயதாகும் இவர், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதையடுத்து கிரிஜாவைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
நேரடியாக சென்று பிடிக்க முயற்சித்தால் அது பலன் அளிக்காமல் போய் விடும் என்பதால் மாறு வேடத்தில் செல்ல போலீஸார்முடிவு செய்தனர். அதன்படி ஒரு காவலர், கஞ்சா வியாபாரி போல வேடம் பூண்டு கிரிஜாவின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சென்றபோது வீட்டுக்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. இருப்பினும் கிரிஜா வீட்டுக்குள் தான் இருந்தார். இதைஅறிந்த போலீஸ்காரர் கதவைத் தட்டினார். உடனே கிரிஜா கதவைத் திறந்தார்.
கஞ்சா வாங்க வந்திருப்பதாக போலீஸ்காரர் கூறியதால், அவரை உள்ளே அனுமதித்தார். கஞ்சாவுக்கு விலை பேசிக்கொண்டிருந்தபோது போலீஸ் படை அங்கு வந்தது. கிரிஜாவின் வீட்டிற்குள் புகுந்து கிரிஜாவை கஞ்சாவும், கையுமாகபிடித்தனர்.
அவரிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் இருந்த மாமன் மகன் கரிகாலன்என்பவரும் கைது செய்யப்பட்டார். கிரிஜாவை அரசினர் மகளிர் காப்பகத்தில் போலீஸார் வைத்துள்ளனர். அவரை இன்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதுவரை எந்த வழக்கிலும் சிக்காமல் இருந்து வந்தார் கிரிஜா. அண்ணன் மறைவுக்குப் பின்னர் அவர் முதல் முறையாகபோலீஸில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிஜா கைது செய்யப்பட்டதால் அயோத்தி குப்பம் பகுதியில் பரபரப்புநிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications