ஜெ. வுடன் வழக்கறிஞர்கள் சந்திப்பு: போராட்டம் முடிவுக்கு வருகிறது
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தாமல் இருக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அவரை சந்தித்தபின்னர் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், சட்டத்துறை அமைச்சர்பரத்வாஜ் ஆகியோரை பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து திருத்தங்களை வாபஸ் பெறுமாறு கோரிக்கைவிடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்சங்கம், தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர் கூட்டமைப்பு, சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தபிரதிநிதிகள் சந்தித்தனர்.
அப்போது, சட்டத் திருத்தங்களை அமல்படுத்தாமல் இருப்பதற்கு வகை செய்யும், அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை பொறுமையாக கேட்ட ஜெயலலிதா,
அவசரச் சட்டம் கண்டிப்பாக பிறப்பிக்கப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றுஉறுதியளித்தார். இதையடுத்து வெளியே வந்த சென்னை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தமிழ்மணி செய்தியாளர்களிடம்கூறுகையில், எங்களது கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார்.
இந்தத் திருத்தங்களை நிறுத்தி வைக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை பிறப்பிப்பது குறித்து அரசு நிச்சயம் பரிசீலனைசெய்யும். அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.
இதன் மூலம் எங்களது கோரிக்கை நிறைவேறியுள்ளது. நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை நிச்சயம்பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். இதனால் எங்களது போராட்டம் முடிவுக்கு வருகிறது. மீண்டும்நீதிமன்றங்களுக்குத் திரும்புவது குறித்து நாளை பொதுக்குழுவைக் கூட்டி முடிவு அறிவிக்கவுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications