ஆந்த்ராக்ஸ்: தமிழக பால் பொருளுக்கு கேரளா தடை
பொள்ளாச்சி:
மாடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவி வருவதை தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து பால் மற்றும் மாடுகளை கொண்டு வர கேரளஅரசு தடை விதித்துள்ளது.
இதை அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் அறிவிக்காவிட்டாலும், இப்பகுதியில் மாடுகள் அடிக்கடி பலியாவது மாடுவியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான அளவில் கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாகதென்னிந்தியாவின் மிகப்பெரிய மாட்டுச் சந்தையான பொள்ளாச்சியிலிருந்து தான் அதிக அளவில் கேரளாவுக்கு மாடுகள்கொண்டு செல்லப்படுகின்றன.
இந் நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மாடுகளை கொண்டு வர கேரள அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றுதமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மாடுகள் அனைத்தும் சோதனைச் சாவடிகளில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் மாடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதால், மாடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவரக்கூடாது என்று கேரள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் கூறினர். இதனால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன்தங்களது மாடுகளுடன் திரும்பினர்.
மேலும் தமிழ்நாட்டிலிருந்து பால் கொண்டு செல்லவும் கேரள அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications