ஆட்டோ கட்டணம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு
சென்னை:
ஆட்டோ கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய மறுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கால் டாக்சி, ஷேர் ஆட்டோ, வேன் போன்றவை கணிசமான அளவுக்கு அதிகரித்துவிட்டன. ஆனால் அதற்கேற்ற வகையில் ஆட்டோக்கள் மீது அரசு பரிவும், கவனமும் செலுத்தவில்லை.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்டோ மீட்டரில் ஏதாவது குளறுபடி, பழுது என்றால்அவர்களை சிறையில் தள்ளி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன.
ஆனால் ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு தீவிர அக்கறை காட்டுவதில்லை. ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் 14 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் பலமுறை போக்குவரத்து செயலாளரிடம்மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது.
அப்போது தலைமை நீதிபதி கட்ஜூ கூறுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டண உயர்வு தொடர்பாக கொடுக்கும் மனுவைபரிசீலிக்க மாட்டோம் என்றோ ஆட்டோ கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்றோ அரசு கூறுவது சரியில்லை.
மனுதாரர் 2 வாரத்திற்குள் புதிய மனுவை போக்குவரத்து செயலாளரிடம் கொடுக்க வேண்டும். அதை 2 வாரத்திற்குள்பரிசீலித்து போக்குவரத்து செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதால் தான் மீட்டரில் சூடு வைப்பது, வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசுவது,அதனால் பிரச்சினைகள் ஏற்படுவது போன்றவை நிகழ்கின்றன. இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆட்டோ கட்டணத்தை எப்படி உயர்த்துவது என்று அரசு வழக்கறிஞர் கேட்கிறார். அப்படியானால் எதற்காக இத்தனை முறைபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினீர்கள்? விலையேற்றத்தை சமாளிக்கவே ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணத்தைஉயர்த்துமாறு கோருகிறார்கள்.
எனவே இப்பிரச்சினையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications