ஜெ. நகைகள்: எடுத்துச் செல்ல வருகிறார் பெங்களூர் நீதிபதி
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நேரில்வந்து சரிபார்த்து பெற்றுச் செல்லுமாறு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரேவுக்கு, சென்னைதனிநீதிமன்ற நீதிபதி மதிவாணன் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தவழக்கில் ஜெயலலிதா வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பொருட்கள், செருப்புகள், ஒரு சொகுசுப்பேருந்து
ஆகியவற்றை ஒப்படைக்குமாறு கூறி இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை தன்மை நீதிபதி மற்றும்நீதிமன்றப் பதிவாளருக்கு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு சென்னை தனி நீதிமன்ற நீதிபதி மதிவாணன் பதில் அளித்துள்ளார். அதில், இந்த வழக்கில் பறிமுதல்செய்யப்பட்ட பொருட்களை நீங்களே நேரில் வந்து சரிபார்த்து பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பச்சாப்பூரே சென்னை செல்ல கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்.கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அவர், பறிமுதல் செய்யப்பட் பொருட்களை பெற்றுக்கொள்ள வருவார் என்று தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 28 கிலோ எடையுள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள், 41 குளிர்சாதன பெட்டிகள்,பட்டுப் புடவைகள், சொகுசுப் பேருந்து உள்ளிட்ட 1600 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications