மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அரசு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் இந்திய மாவோயிஸ்ட் அமைப்பு ஆகியவைஇணைந்து தான் இந்த கட்சி உருவானது.
மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.சட்ட விரோத செயல்களிலும் இக்கட்சி ஈடுபட்டு வருகிறது.
மேலும் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. மதுரை, தர்மபுரி, திருவள்ளூர் உட்படபல மாவட்டங்களில் அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளது.
இந்த காரணங்களால் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குற்றச்சட்டப் பிரிவு 1908ன் படி தடை விதிக்கப்படுகிறது என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications