"வைகையை தகர்க்க சதி: வெடிகுண்டுகள் சிக்கின

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தகர்க்க வைக்கப்பட்டிருந்த 3 மூட்டை வெடிகுண்டுகளை போலீஸார் தக்க சமயத்தில்கண்டுபிடித்து அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் ரயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஒரு மூட்டையை பயணிகள் சிலர்பார்த்தனர். சந்தேகத்திற்குரியதாக அது இருந்ததால், ரயில்வே போலீஸாருக்குத் தகவல் போனது.

போலீஸார் விரைந்து வந்து அந்த மூட்டையைக் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அப்போது, சாம்பல் நிறத்தில் வெடி மருந்துகள்,சிறு சிறு பாக்கெட்டுகளில் போட்டு மூட்டையில் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்திய போலீஸார் மேலும் 2 மூட்டைகளைக் கண்டுபிடித்தனர். ஒவ்வொருமூடையிலும் கிட்டத்தட்ட 500 வெடிமருந்து பொட்டலங்கள் இருந்தன. வெடிமருந்துகளின் மொத்த எடை 57 கிலோ ஆகும்.

வெடிமருந்து மூட்டைகள் கண்டிபிடிக்கப்பட்ட நேரத்தில் தான் வைகை எக்ஸ்பிரஸ் அப்பாதையைக் கடப்பதாக இருந்தது.இதனால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்க்கும் சதியாக இது இருக்குமோ என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.

வெடிமருந்து மூட்டைகளை தண்டவாளத்தில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர். திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிரக் கண்காணிப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+