காவிரிக்காக போராட்டம்: திமுக கூட்டணி முடிவு
சென்னை:
காவிரி பிரச்சினை தொடர்பாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தநேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட்தலைவர்கள் வரதராஜன், நல்லக்கண்ணு, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடத்ததீர்மானம் போட்டுள்ளோம். அதற்காக நான் டெல்லி சென்று முறையிட வேண்டிய அவசியம் இல்லை.
டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தின் சார்பிலே மத்தியஅமைச்சர்களாக இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து டெல்லியில் முறையிடுவார்கள்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஒவ்வொரு கட்சியும் ஒரு போராட்டம் மேற்கொண்டுள்ளது. அதில் தவறில்லை. கூட்டணியில்இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் தனித் தனி போராட்ட முறை இருக்கும். திமுக சார்பில் போராட்டம் நடந்தது.
கம்யூனிஸ்டுகள் போராட்டம் அறிவித்துள்ளனர், மதிமுக போராட்டம் நடத்தியது, விவசாய அமைப்புகள் கிளர்ச்சியில்ஈடுபட்டுள்ளன. கூட்டணி சார்பில் எடுக்கப்பட்டுள்ள பொதுவான போராட்ட முறையை நான் கூறினேன்.
நிலைமை மோசமாகுமானால், வேலை நிறுத்தம் போன்றவை குறித்து பரிசீலிக்கப்படும். வேலை நிறுத்தம் செய்வது போன்றயோசனை தற்போது எழவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக அரசுடன் மத்திய அரசும்பேசலாம், மாநில அரசும் பேசலாம்.
ஆனால் இதுவரை மாநில அரசு, கர்நாடக அரசுடன் பேசியுள்ளதா? ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறதா? கர்நாடகமுதல்வருக்கு கடிதம் எழுதியதாக தமிழக முதல்வர் தரப்பில் சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு கடிதமே வரவில்லை என்று கர்நாடக முதல்வர் மறுத்துள்ளார். இதைப் பற்றி இப்போது பேசிபயனில்லை. முதலில் பிரச்சினை தீர வேண்டும். மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.அதன் பின்னர்போராட்டங்கள் நடைபெறும். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
அதுபோல செய்திகள் வராமல் இருக்கும் வகையில் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டணியினருக்குதெரிவித்துள்ளேன். கூட்டணிக் கட்சிகளை உடைப்பதற்கான முயற்சிகளில் உளவுத்துறை மூலம் அதிமுக அரசு முயற்சிகளைமேற்கொண்டுள்ளது.
அந்த முயற்சிகள் தற்போதும் நடந்து கொண்டுள்ளன என்றார் கருணாநிதி.
சென்னையில் மினி பஸ்களை இயக்கக் கூடாது, எஸ்மா, டெஸ்மா சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்டமேலும் பல தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications