பாதியில் படிப்பை கைவிடுபவர்களுக்கு உதவி: ஜெ. அறிவிப்பு
சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்இறந்து விட்டால், அந்த மாணவர்களின் படிப்பை தொடருவதற்கு உதவ, ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடாமல் இருப்பதற்காக, அந்த மாணவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கும் திட்டத்தைஏற்கனவே ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 5 கோடி நிதியை ஜெயலலிதா ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 2 கோடியும், தொடக்கக் கல்வித் துறைக்கு ரூ. 3 கோடியும்ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் மாணவ, மாணவியரின் பெயரில் ரூ. 50,000 வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அரசு நிதி நிறுவனங்களில்முதலீடு செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்களது படிப்பைபிளஸ்டூ வரை தொடர இது வகை செய்யும்.
இந்த நிதியுதவியைப் பெற மாணவ, மாணவர்களுக்கு சில விதிமுறைகளை அரசு வகுத்து அறிவித்துள்ளது.
அதன் விவரம்: வருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ அல்லது முடங்கிப் போனாலோ அது தொடர்பாக கிராமநிர்வாக அதிகாரி அல்லது தாசில்தாரிடம் உரிய சான்றிதழ் பெற்று தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பித்துவிண்ணப்பிக்க வேண்டும்.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களாக இருந்தால், பெற்றோரின் இறப்புச் சான்றிதழுடன் உதவித் தொகை கோரும் மனுவைதலைமை ஆசிரியர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளியாகஇருந்தால், முதன்மை கல்வி அதிகாரிக்கும் அனுப்ப வேண்டும்.
மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகை தமிழ்நாடு மின்சார நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைக்கப்படும்.இதிலிருந்து கிடைக்கும் வட்டி ஆண்டுதோறும் மே மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிதியுதவிக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று வரும் மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டால், 12 ஆண்டு காலபள்ளிப் படிப்பு மற்றும் 3 வருட கால கல்லூரிப் படிப்பை கணக்கிட்டு அந்தக் காலம் முடிவடைந்த பின்னர் முழுமுதலீட்டுத் தொகையும் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications