அயோத்தி தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு உதவிய 5 பேர் கைது
டெல்லி:
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி- ராம ஜென்மபூமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக ராமர் கோவில் அருகேதீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பாக காஷ்மீரில் 5 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் தேதி இந்தத் தாக்குதல் நடந்தது. கோவிலைத் தகர்க்க வந்த 6 தீவிரவாதிகளை மத்திய பாதுகாப்புப் படையினர்சுட்டுக் கொன்றனர். இந் நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக 5 பேரை மத்தியப் படையினர் காஷ்மீரில் கைதுசெய்துள்ளனர். இவர்களும் லஷ்கர் தீவிரவாதிகளே. மேலும் 3 பேர் தப்பிவிட்டனர்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அயோத்தியில் நடந்த தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாத அமைப்பு தான் திட்டமிட்டு நடத்தியது என்பது உறுதியாகியுள்ளது.
அயோத்தியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட 2 டாடா சுமோக்கள், மற்றும்ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
மேலும் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு சில பெண்களும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூரில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். அக்பர்பூரில்பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லக்னெளவில் சோதனை:
இதற்கிடையே அயோத்தி தாக்குதல் தொடர்பாக லக்னெளவில் வசீர்காஞ்ச் பகுதியில் உத்தரப் பிரதேச போலீசார் அதிரடிசோதனை நடத்தினர். இங்கு கேபிள் ஆபரேட்டர் ஒருவரின் வீட்டில் சோதனை நடந்தது. ஆனால், அங்கு எந்த தடயமும்கிடைக்கவில்லை.
இந்தக் தாக்குதல் தொடர்பாக இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த எட்டு பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications