இன்றும் விவசாயிகள் மறியல்: போலீஸ் தடியடி
திருச்சி:
காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடக் கோரி திருச்சியில் விவசாயிகள் இன்றும் சாலை மறியல் மற்றும் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டஇடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீஸார் கைதுசெய்தனர்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. திருச்சி மற்றும்திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தின் போது போலீஸாருக்கும்,விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி ரயில் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.ரயில் நிலையத்திற்குள் செல்ல மறியலில் ஈடுபட்டோர் முயன்றபோது அவர்களைப் போலீஸார் தடுத்தனர்.
இந்த சமயத்தில் போலீஸாருக்கும், போராட்டாக்காரர்களுக்கும் இடையே பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டது.
இதில் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலரின் சட்டை கிழிந்ததால் ஆவேசப்பட்ட மற்றவர்கள்போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். இருப்பினும் அதை சமாளித்து அனைவரையும் போலீஸார் பஸ்களில் ஏற்றிகைது செய்து கொண்டு சென்றனர். 500 பேர் இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டனர்.
இதேபோல திருத்துறைப்பூண்டி அருகே மணலி என்ற இடத்தில் நடந்த போராட்டத்தின் போதும் மோதல்ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில் 2 பெண்கள் உள்ளிட்ட சிலர்காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் இந்த 48 மணி நேர போராட்டம் முடிவுக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications