விநாயகமூர்த்தி மீது தாக்குதல்: 4 காங். தொண்டர்கள் நீக்கம்
சென்னை:
ஜெயலலிதாவைப் புகழ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏவுமான விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி பவனில் வைத்துதாக்கப்பட்டது தொடர்பாக 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் வியாழக்கிழமை சத்தியமூர்த்தி பவனுக்கு விநாயகமூர்த்தி வந்தபோது அவரை வாசன் ஆதரவாளர்கள்முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் விநாயகமூர்த்தியை சரமாரியாக அடித்தனர். முதுகில் குத்திகீழே தள்ளினர்.
வாசன் கோஷ்டியைச் சேராத தொண்டர்கள் விரைந்து வந்து விநாயகமூர்த்தியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அழைத்துச்சென்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே, மூத்த தலைவர் ஒருவரை தொண்டர்கள் தாக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து விநாயகமூர்த்தி கூறுகையில், காங்கிரஸ் கட்சியை வளர்த்ததில் எனக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.நான் வளர்த்த கட்சியில் உழைத்த உழைப்பை எந்தக் காலத்திலும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.
கட்சியில் விளக்கம் கேட்கும் சூழ்நிலையில் இல்லை. கட்சிக்கோ, கூட்டணித் தலைவர்களுக்கு புறம்பாகவோ நான் கருத்துஏதும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார் விநாயகமூர்த்தி.
4 பேர் நீக்கம்:
இதற்கிடையே விநாயகமூர்த்தியைத் தாக்கிய வட சென்னை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே சந்துரு, விஜயன், மாரி,ரமேஷ் ஆகியோரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித் லைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.
இளங்கோவன் கண்டனம்:
விநாயகமூர்த்தி தாக்கப்பட்டதற்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜரால், சிறந்த மாவட்ட தலைவர் என்றுபாராட்டப்பட்டவர் விநாயகமூர்த்தி.
70 வயதைத் தாண்டிய முதுபெரும் தலைவரான அவரை சத்தியமூர்த்தி பவனிலேயே தாக்கியது கடும் கண்டனத்துக்குரியது,மிகவும் வேதனைக்குரிய செயலாகும். தரம் தாழ்ந்த இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியின் கெளரவமும், தீரர் சத்தியமூர்த்தியின் பெயரால்இயங்கி வரும் காங்கிரஸ் தலைமையகத்தின் மரியாதையும், காமராஜர் பணியாற்றிய இடத்தின் கண்ணியமும் காக்கப்படும் எனநம்புகிறேன் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications