தொகுதிப் பங்கீட்டுக்குத் தயாராகும் திமுக கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகி விட்டது.

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் வரலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளை ஆரம்பித்து விட்டன

அதிமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் விதத்தில் பல்வேறு அறிவிப்புகளையும்,சலுகைகளையும் சரமாரியாக அறிவித்து வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மக்களின் கவனத்தை ஈர்க்கும்வகையிலான காரியங்களில் இறங்கியுள்ளன.

இந் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. புதன்கிழமைகருணாநிதி தலைமையில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேர்தலுக்குத்தயாராவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அப்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் பாமக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய முக்கியக் கட்சிகளுடன் பல்வேறு சிறியகட்சிகளும் இடம் பெற்றுள்ளன. முன்பெல்லாம் சின்னக் கட்சிகளுக்கு தொகுதிகளைத் தராமல் இதயத்தில் இடம் கொடுத்துஅவர்களை விட்டு விடுவார் திமுக தலைவர் கருணாநிதி.

ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டணியில் இடம் பெற்றுள் அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சீட் தரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தனித்துப் போட்டியிட்டாலும் கூட அதன் பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றுகருணாநிதி முடிவு செய்துள்ளாராம். கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத் தேர்தல் தந்த முடிவு தான் இதற்கு முக்கியக்காரணம் என்கிறார்கள்.

எனவே கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதும் தொகுதிகள் குறித்தபட்டியலை தருமாறு கருணாநிதி கோரியுள்ளாராம். அந்தப் பட்டியல் வந்த பிறகு யாருக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம்என்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாம்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கருணாநிதி இந்த கோரிக்கையை வெளியிட்டாலும் கூட திமுகவுக்கும்,பாமகவுக்கும் இடையே ஏற்கனவே தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டதாக ஒரு பேச்சு உலவுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பே பாமகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து கருணாநிதி முடிவு செய்து விட்டதாகவும்,அதை ராமதாஸும் ஏற்றுக் கொண்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளே இந்த முறையும் ஒதுக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில தொகுதிகளில் மாற்றம் வரலாம் என்றும் தெரிகிறது.

கடந்த தேர்தலில் திமுக 28 இடங்களிலும், பாமக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் தமாகா கூட்டாக 28 தொகுதிகளிலும்,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை இந்தக் கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில்இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெறக் கூடிய தொகுதிகளின் பட்டியலை கூட்டணிக் கட்சிகள் கொடுத்த பின்னர் தொகுதிப் பங்கீடு தொடர்பானபேச்சுவார்த்தைகளை கருணாநிதி தொடங்குவார் என்று தெரிகிறது.

கூட்டணிக்குள் விடுதலைச் சிறுத்தைகளை கொண்டு வர ராமதாஸ் விரும்புகிறார். ஆனால் அதை கருணாநிதி விரும்பவில்லை.இதுதொடர்பாக மட்டுமே திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே திமுக கூட்டணியில் பாமக நிச்சயம் நீடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+