தமிழக தேர்தல் ஆணையர் பதவி: வயது வரம்பு திடீர் ரத்து!
சென்னை :
தமிழக தேர்தல் ஆணையரின் பதவிக்கு இருந்து வந்த அதிகபட்ச வயது வரம்பை தமிழக அரசு திடீரென ரத்துசெய்துள்ளது. இதன் மூலம் மாநில அரசு நினைக்கும் நபர், அரசு நினைக்கும் காலம் வரையிலும் ஆணையர்பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந் நிலையில் தமிழக தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக அரசு தனது அரசிதழில் (கெஜட்)வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
இப்போதுள்ள விதிப்படி தமிழக தேர்தல் ஆணையராக பதவி வகிப்போர் 2 ஆண்டுகள் வரை அப்பதவியில்இருக்கலாம். அதிகபட்சம் 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம்.
ஆக மொத்தம் 6 ஆண்டுகள் வரை அவர் அப்பதவியில் நீடிக்க முடியும். அல்லது 62 வயது வரை தேர்தல்ஆணையர் பதவியில் இருக்கலாம்.
உள்ளாட்சித் தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் பதவி நீடிப்புகாலகட்டத்தில் முக்கியத் தேர்தல்களை நடத்த முடியாது. எனவே உள்ளாட்சித் தேர்தலின்போது பதவி நீட்டிப்பில்தேர்தல் ஆணையர்கள் இருந்தால் தேர்தலை நடத்த முடியாமல் போய் விடுகிறது.
பஞ்சாயத்து தேர்தல்களை நடத்த ஆணையரின் அறிவு மற்றும் அனுபவத்தை தமிழக அரசு பயன்படுத்துவதற்குவயது வரம்பு தடையாக உள்ளது.
எனவே மாநில தேர்தல் ஆணைர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பை ரத்து செய்ய அரசுமுடிவு செய்து இதுதொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக அரசு நினைக்கும் வரை தேர்தல் ஆணையர் அந்தப் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழல்உருவாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications