தயாரிப்பாளர் காஜா மைதீன் தற்கொலைக்கு முயற்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரான காஜா மைதீன் 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்குமுயற்சி செய்தார். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனது ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பொற்காலம், வாஞ்சிநாதன், பேரரசு உள்ளிட்ட பல்வேறுபடங்களைத் தயாரித்துள்ளவர் காஜா மைதீன். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு என்றபடத்தைத் தயாரிக்க பூஜை போட்டுள்ளார்.

இந்தப் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பூஜையோடு இப்படம் நிற்கிறது, இன்னும் படப்பிடிப்புதொடங்கவில்லை.

Kamalahasan

இந் நிலையில் ஒரு பைனான்சியரிடமிருந்து ரூ. 20 லட்சம் கடன் வாங்கியுள்ளார் காஜா மைதீன். இந்தப்பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் சிரமப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பைனான்சியர், காஜா மைதீனை மிரட்டி அவரது ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை,தனது பெயரில் மாற்றி எழுதி விட்டதாக கூறப்படுகிஷ்ரறது

.இதனால் மன வேதனை அடைந்த காஜா மைதீன், வியாழக்கிழமை தனது வீட்டில் 40க்கும் மேற்பட்ட தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து மயங்கிக் கிடந்த அவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மயக்க நிலையில் இருக்கும் காஜா மைதீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும்அவர் ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்த் திரையுலகத்தில் கந்து வட்டிக் கும்பல்களின் அராஜகம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மதுரைகந்து வட்டிக்காரரிடம் சிக்கி பட அதிபர் ஜீ.வி. உயிரை விட்டது நினைவுகூறத்தக்கது.

பெரும்பாலும் இந்தக் கந்துவட்டிக் கும்பல்கள் ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள், மற்றும் அவர்களுக்குநெருக்கமானவர்களின் பினாமிகளாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இவர்கள் மீது புகார் கொடுத்தாலும் காக்கிகள் கண்டுகொள்வதில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+