குளித்தலை ஆசிரியை: உயர்நீதிமன்றம் இறுதி கெடு
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் போலீஸார்விசாரணையை முடிக்காவிட்டால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பது குறித்து தீவிரமாகபரிசீலிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அறிவித்துள்ளது.
மீனாட்சி காணாமல் போனது தொடர்பாக அவரது கணவர் தொடர்ந்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவைவிசாரித்து வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையை முடிக்க பல முறை போலீஸுக்கு கெடுவிதித்தும் இன்னும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை கிளையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனோவசிய முறையில், மீனாட்சி வழக்கில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணைநடத்தியதற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அப்போது இந்த விசாரணையில் துப்பு துலங்காமல் இருப்பதால் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும்,ஆகஸ்ட் மாத இறுதி வரையில் கெடுவை நீட்டித்தால் நல்லது என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கை குறித்து இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் சிவசுப்ரமணியன் மற்றும் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது,ஆகஸ்ட் 22ம் தேதி வரை போலீஸாருக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது.
அதற்குள் விசாரணையை முடித்து விட வேண்டும். தவறும் பட்சத்தில், இந்த வழக்கை சிபிஐயிடம்ஒப்படைப்பது குறித்து நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டி வரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications