இன்ஸ்பெக்டர் உடையில் கோர்ட்டுக்கு வந்த மன்சூர் அலிகான் கைது
சென்னை:
காவல் ஆய்வாளர் சீருடையில், நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட வந்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
முன் ஜாமீன் நிபந்தனைப்படி தினமும் காலையும், மாலையும் ஜார்ஜ் டவுன் 15வது நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்கையெழுத்துப் போட வேண்டும். இதன்படி கடந்த 2 நாட்களாக இரு வேளையும் மன்சூர் கையெழுத்துப் போட்டார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அனைவரும் அவரைப் பார்த்து அதிர்ந்தனர். காரணம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் மன்சூர் அலிகான் வந்ததே.
மன்சூர் அலிகான் போலீஸ் சீருடையில் வந்ததற்கு மாஜிஸ்திரேட் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக மன்சூர்அலிகான் மீது வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மன்சூர் அலிகானை கைது செய்தனர். காவலர் சீருடையை தவறாகப்பயன்படுத்திய சட்டப் பிரிவின் கீழ் மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அப்போது மன்சூர் அலிகான் போலீஸாரிடம் கூறுகையில், நான் சைதாப்பேட்டையில் படப்பிடிப்பில் இருந்தேன்.இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட நேரமாகி விட்டதால் சீருடையை கழட்டாமல் அப்படியே வந்து விட்டேன். இன்ஸ்பெக்டர்உடையை வெளியில் அணிந்து வருவது தவறு என்பது எனக்குத் தெரியாது. வேண்டும் என்றே நான் இந்த உடையில்கோர்ட்டுக்கு வரவில்லை என்றார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு முன்பு ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கிபரபரப்பை ஏற்படுத்தியுள்ள மன்சூர் அலிகான், ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்திற்கு இன்ஸ்பெக்டர் உடையில் வந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications