ஊட்டி ரயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!
சென்னை:
ஊட்டி மலை ரயில், உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், அதாவது 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் மலை ரயில் போக்குவரத்துதொய்வின்றி தொடங்கி நடந்து வருகிறது.
உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. பாரம்பரியமிக்க இந்த ரயில் போக்குவரத்தை உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான முயற்சிகளில் தென்னக ரயில்வே, டெல்லியில் உள்ள ரயில்வேஅருங்காட்சியகம் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை இறங்கின.
யுனெஸ்கோவுக்கு ஊட்டி மலை ரயில் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் சிட்னியைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரது தலைமையிலான யுனெஸ்கோ குழு ஊட்டிக்கு வந்துமலை ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தது.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள ரயில் பாதை, ரயில் நிலைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றைஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து ஊட்டி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கலாம் என்றுயுனெஸ்கோவுக்கு லீ தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக தற்போதுஅறிவித்துள்ளது. உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன.
எனவே இந்த ரயிலுக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தருவது மிகப் பொருத்தமானது என்று யுனெஸ்கோஅமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஊட்டி மலை ரயிலைப் போலவே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்றஅந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப் பாரம்பரியச் சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை மேலும் அதிகரித்து இப்பிரதேசம் பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications