விநாயகமூர்த்திக்கு வாசன் மறைமுக எச்சரிக்கை
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யார் நடக்க முயன்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விநாயகமூர்த்தி எம்.எல்.ஏவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக வாசனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான வட சென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோஉள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து இளங்கோவன் உள்ளிட்ட வாசன் எதிர்ப்பு கோஷ்டி தலைவர்கள் விநாயகமூர்த்திக்கு ஆதரவாக அறிக்கைக்கள்விட்டு வருகின்றனர்.
இதையடுத்து விநாயகமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ராயபுரம் மனோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
இந் நிலையில் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு விநாயகமூர்த்தியை வாசன் ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள்வலியுறுத்தினர். ஆனால் விநாயகமூர்த்தி புகாரை வாபஸ் பெற மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறையைக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்குள்பிளவை ஏற்படுத்தவும், கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் ஆளுவோர் முயல்கின்றனர். ஆனால் அது பலிக்காது.
காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றால் அதை கட்சி கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது. காங்கிரஸ்கட்சியினர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறக் கூடாது, கட்சிக்கு கண்ணியக் கேடு ஏற்படுத்த முயலக் கூடாது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடப்போர், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வாசன்.
ஜெயலலிதாவைப் பாராட்டி அடி, உதைப்பட்ட விநாயகமூர்த்திக்கே வாசன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத்தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications