சென்னையில் எம்ஜிஆர் பெயரில் புதிய தொகுதி!!
சென்னை:
தொகுதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் புதிதாக எம்.ஜி.ஆர். நகர் என்ற பெயரில் ஒரு தொகுதிஉருவாக்கப்படவுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் இந்த தொகுதி மறுசீரமைப்பு நடக்கிறது. தமிழக மாநிலத் தேர்தல் ஆணையர் தலைமையில்அமைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக் குழு இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி சென்னையைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி ஆகிய 2 புதிய தொகுதிகள் உருவாகின்றன. மேலும்அண்ணாநகர் தொகுதி பிரிக்கப்பட்டு அண்ணாநகர் மேற்கு, கிழக்கு என இரு தொகுதியாக்கப்படுகிறது.
திருவல்லிக்கேணி தொகுதி அடியோடு ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் தொகுதிகள் எண்ணிக்கை 2அதிகரிகிறது. இதன்மூலம் இனி சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும்.
இதில் பெரம்பூர், எழும்பூர், பூங்கா நகர் ஆகியவை ரிசர்வ் தொகுதிகளாக இருக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரு தொகுதிகளும், கோவை, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும் அதிகரிக்கப்படுகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் 11 புதிய தொகுதிகள் உருவாகின்றன. அதே நேரத்தில் திருவல்லிக்கேணி, தஞ்சை மாவட்டத்தில் 2தொகுதிகள், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, ரமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகியமாவட்டங்களில் தலா ஒரு தொகுதிகள் குறைக்கப்படுகின்றன.
இதனால் மொத்தத்தில் 11 புதிய தொகுதிகள் உருவாகின்றன. 11 தொகுதிகள் குறைக்கப்படுகின்றன.
மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, ஆளும் தரப்புக்கு சாதகமாக தொகுதிகளை மாற்றி அமைத்துவருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications