அமெரிக்காவில் மன்மோகன்: புஷ்சுடன் சந்திப்பு
வாஷிங்டன்:
நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து பிராங்க்பட்ர் வழியாக அமெரிக்கா புறப்பட்ட மன்மோகன் சிங் நேற்று வாஷிங்டன்சென்றடைந்தார்.
சிங் சென்ற வழியில் இந்தியக் கொடிகளையும் அமெரிக்கா பறக்கவிட்டிருந்தது.
இன்று பிரதமர் தனது மனைவி குருசரண் கெளருடன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார். வெள்ளை மாளிகையின் தென்பகுதியில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் தனது மனைவி லாராவுடன் சிங்-கெளர் தம்பதியைபுஷ் வரவேற்பார்.
இதைத் தொடர்ந்து சிங்கும் புஷ்சும் தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். இந்தியாவுக்கு ஐநா சபையின் பாதுகாப்புகவுன்சிலில் நிரந்தர இடம் வழங்குவது, காஷ்மீர் விவகாரம், சர்வதேச தீவிரவாதம், பாதுகாப்பு ஒப்பந்தம், பொருளாதார கூட்டுநடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேசவுள்ளனர்.
இச் சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் பத்திரிக்கையாளர்களை கூட்டாக சந்திக்கவுள்ளனர்.
நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றவுள்ளார். பின்னர்அமெரிக்காவி வசிக்கும் இந்தியர்களின் கூட்டமைப்பு வழங்கும் விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி அளிக்கும் சிங், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபடுகிறார்.
அமெரிக்க துணை அதிபர் டிக் செனி, வெளியுறத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ், நிதியமைச்சர் ஜான் ஸ்னோ, பாதுகாப்புஅமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோரும்பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
இச் சந்திப்புகளை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை ஜெனீவா வழியாக டெல்லி திரும்புகிறார் சிங்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications