ராஜிவ்: 2 இலங்கை தமிழர்கள் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
ராஜிவ் கொலை வழக்கில் லிங்கம், வசந்தன் ஆகிய விடுதலைப் புலிகளை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துவெளியிட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கை பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டு விசாரணைக்குழுவின் தலைவராக சிபிஐ இயக்குனர் உள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் லிங்கம், வசந்தன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25ம் தேதி விடுதலைசெய்தது.
இதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், லிங்கமும்,வசந்தனும் ராஜிவ் கொலையாளிகளுக்கு பல வகையிலும் உதவிகள் புரிந்துள்ளனர். கொலைக்கு இவர்களது உதவியும் முக்கியகாரணமாக இருந்துள்ளது. எனவே இவர்களது விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் விடுவித்து சென்னைஉயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதே நேரத்தில் இந்த இருவர் மீதும் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல்செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்தனும் லிங்கமும் 1999ம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் செங்கல்பட்டு அருகே உள்ள இலங்கைஅகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அனுமதியில்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications