இரவில் ஸ்பீக்கர்கள், வாகன ஒலிப்பான்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
மக்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் ஒலிப்பான்களை (ஹாரன்) பயன்படுத்தஉச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுற்றுப்புற சூழல் விஷயத்தில் புகை, மாசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் காட்டப்படும் ஆர்வத்தை ஒலியால் ஏற்படும்மாசுவைக் கட்டுப்படுத்துவதில் அரசுகள் காட்டவில்லை.
இந் நிலையில் உச்ச நீதிமன்றமே முன் வந்து இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி அசோக் பான் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஆம்ப்லிபையர் உதவியுடன் ஒலிஅதிகரிக்கப்பட்ட ஸ்பீக்கர்கள், வாகன ஒலிப்பான்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்ததனர்.
அத்தோடு இரவில் பட்டாசுகள் வெடிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துமாறும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications