பொறாமையில் பொசுங்கும் கருணாநிதி: ஜெ. தாக்கு
திருவள்ளூர்:
தமிழக மக்களுக்கு நான் அறிவித்து வரும் சலுகைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் பொறாமையால் பொசுங்கிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அவரது வருகையை ஒட்டி திருவள்ளூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஊரெல்லாம் அம்மா.. தாயே போஸ்டர்கள்,வரவேற்பு வளைவுகள், அதிமுக கொடிகள், தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், போலீஸ் தலைகள், கதர் வேட்டிகள் எனகலகலத்தது திருவள்ளூர்.
பகல் 11.30 மணியளவில் திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் வளர்ச்சித்திட்டங்களுக்கான விழா நடைபெற்றது. ரூ. 377.87 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்து ஜெயலலிதாபேசியதாவது:
நான் மக்கள் நலன் கருதி பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறேன், செயல்படுத்தி வருகிறேன்.
ஆனால் இதைப் பொறுக்க முடியாத கருணாநதி போன்ற சிலர் பொறாமையில் பொசுங்கிப் போய்க கொண்டிருக்கின்றனர். நான்அறிவிக்கும் திட்டங்களை, சலுகைகளை விமர்சித்து அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தலை மனதில் கொண்டேஇவற்றை நான் அறிவிப்பதாக விமர்சிக்கின்றனர்.
மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் எப்போதும் தேர்தலை நினைத்தே, பதவியை நினைத்தே செயல்பட்டுக்கொண்டிருக்கும், கோட்டையைப் பிடிப்பது எப்படி என்று கனவு கண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு நான் அறிவிக்கும்சலுகைகள், திட்டங்கள் எட்டிக் காயாகத்தான் இருக்கும்.
திமுக ஆட்சியின்போது சுரண்டப்பட்டு படு மோசமான நிலையில் இருந்த தமிழகத்தின் நிதி நர்வாகம் எனது அரசு பதவிக்குவந்த பிறகு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இன்று சீராக, உறுதியாக உள்ளது. இதன் காரணமாகவே இத்தனைசலுகைகளையும், திட்டங்களையும் அறிவிக்க முடிகிறது.
மக்கள் நலன் கருதியே நான் பல்வேறு சலுகைகள், திட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்தேன். இப்போது மக்கள் நலன்கருதியே அவற்றை மீண்டும் வழங்கி வருகிறேன்.
நான் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளேன். எனவே கருணாநிதி போன்றவர்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும்,பொறாமையில் பொசுங்கினாலும் எங்களது கூட்டணியை உடைக்க முடியாது என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியில் 24,317 பேருக்கு ரூ. 10.03 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
ஜெயலலிதா வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications