ஜெயலட்சுமிக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருமா?
மதுரை:
போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி தொடர்பான வழக்குகளில் அவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற காவல்துறை முடிவு செய்தது.
இதையடுத்து, தனது உயிருக்கு தொடர்ந்து ஆபத்து இருந்து வருவதாகவும் எனவே போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்என்றும் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம்,கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியது.
இந்த வழக்கு நீதிபதி அகமதுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலட்சுமி சார்பில் ஆஜரானவழக்கறிஞர்கள், ஜெயலட்சுமியின் உயிருக்கு இன்னும் ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்என்றனர்.
இதற்கு ஆட்சேபனை மனு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை என்று அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் கூறினார். இதை ஏற்ற நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications