இந்தியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா!
வாஷிங்டன்:
இந்தியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க அமெரிக்கா முன் வந்துள்ளது. மேலும் இந்திய அணு சக்தி நிலையங்களுக்குத்தேவையான யுரேனியம் எரிபொருளை வழங்கவும் முன் வந்துள்ளது.
அமெரிக்கா வந்துள்ள சிங்குக்கு அந் நாட்டு அரசு மிகச் சிறந்த வரவேற்பையும் கெளரவத்தையும் வழங்கி வருகிறது. புஷ் தவிரதுணை அதிபர் டிக் செனி, பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் உள்ளிட்டமூத்த அமைச்சர்கள் சிங்கை சந்தித்துப் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு, அணு சக்தி ஆகிய துறைகளில் இணைந்துசெயல்படுவது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்குவது குறித்த விஷயத்தில் அமெரிக்காவின் ஆதரவைமன்மோகன் சிங் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பயணத்தில் மிக முக்கிய அம்சமாக இந்தியாவை அணுஆயுத நாடாக அங்கீகரிக்க அமெரிக்கா முன் வந்துள்ளது.
31 ஆண்டுகளுக்கு முன் போக்ரான் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து இந்திய அணு சக்தி நிலையங்களுக்கு உலைகள்வழங்கவும், எரிபொருள் வழங்கவும் அமெரிக்கா தடை விதித்திருந்தது.
இந்த சர்வதேசத் தடையால் எரிபொருள் பெறுவதில் சிக்கல் உண்டானது.
இந் நிலையில் இந்தியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிப்பதோடு, இந்திய அணு நிலையங்களுக்கு எரிபொருள் தரவும் கூடஅமெரிக்கா முன் வந்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் விடுத்த அழைப்பையும் ஜார்ஜ் புஷ் ஏற்றுக் கொண்டார். அடுத்த ஆண்டு அவர்இந்தியா வருகிறார்.
இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இதையடுத்து மன்மோகன்சிங்-குருசரண் கெளர் தம்பதிக்கு புஷ்-லாரா தம்பதி வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்தளித்தனர்.
அதிபரான பிறகு உலகத் தலைவர்களுக்கு ஜார்ஜ் புஷ் அளித்துள்ள மிகச் சிறப்பான 5 விருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.இரண்டாவது முறையாக அதிபரான பின்னர் அவர் வழங்கிய மிகப் பெரிய விருந்து இதுவே.
பாஸ்மதி அரிசி, மூலிகை சூப் உள்ளிட்ட இந்திய வகை உணவுகளோடு இந்த விருந்து அமைந்திருந்தது. உணவு மேஜை காவிநிற உயர் ரக பட்டு விரிப்பு, தாமரைகள், தந்தத்தால் ஆன யானை சிலைகள், ரோஜாக்கள் ஆகியவற்றால்அங்கரிக்கப்பட்டிருந்தது.
வெள்ளை மாளிகையின் சிறப்பு இசைக் குழுவினர் ஜாஸ் இசைக்கு மத்தியில் 135 பங்கேற்க இந்த விருந்து நடந்தது.
விருந்தின் ஆரம்பத்தில் பேசிய புஷ், உலகின் இரு மாபெரும் கலாச்சாரங்கள்-ஜனநாயகங்கள் மேலும் பலம் பெறட்டும்.பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்டது தான் இந்தியாவின் பலமே என்றார்.
இதையடுத்துப் பேசிய சிங், இந்திய-அமெரிக்க உறவில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஜார்ஜ் புஷ்ஷின்பலமான தலைமையே காரணம் என்றார்.
வழக்கமாக இரவில் விரைவிலேயே உறங்கச் சென்றுவிடும் புஷ், இந்த இரவு விருந்தில் முழு நேரமும் இருந்தார். சிங்கைவழியனுப்பிவிட்டு மிகத் தாமதமாகவே கிளம்பிச் சென்றார்.
இந்தியா- அமெரிக்கா இடையே பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. 2004ம் ஆண்டில்இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி 6.1 பில்லியன் டாலராக இருந்தது. இந்திய ஏற்றுமதி 19.2 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.
மேலும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுடன் மேலும் ஒன்றிணைந்து செயல்படுவது என அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications