ஆடைகளை களைந்து சோதனை: அவமானத்தில் மாணவி தற்கொலை
விழுப்புரம்:
ஆசிரியையின் பணம் திருட்டுப் போனதையடுத்து, வகுப்பில் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியதால்அவமானமடைந்த 15 வயது மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது வகுப்பு ஆசிரியை அஞ்சலிதேவி, தான் வைத்திருந்த ரூ. 1,200 பணத்தைக் காணவில்லை என்று தலைமைஆசிரியரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அஞ்சலி தேவியின் வகுப்பு மாணவிகளிடம் அவரும், மேலும் இரண்டுஆசிரியர்களும் சேர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சரண்யா மீது சந்தேகப்பட்ட ஆசிரியை அஞ்சலி தேவி, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரதுஆடைகளைக் களையச் சொல்லி சோதனை போட்டுள்ளார். ஆனால் அவரிடம் பணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த சோதனையால் சரண்யா அவமானமடைந்தார்.
பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த சரண்யா, மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயத்துடன் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவனைக்குக் காண்டு போகப்பட்டார். அங்குசிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
சரண்யா இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியை அஞ்சலி தேவி மற்றும் இருஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த 3 ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைபோலீஸார் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications