தமிழ் வழிப் பள்ளி இடிப்பு; பொதுமக்கள் கொந்தளிப்பு!
சென்னை:
சென்னை வேளச்சேரி அருகே தமிழ் வழிப் பள்ளியை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியதால்பொதுமக்கள் கொந்தளித்தனர். புல்டோசரை சிறை பிடித்து சாலை மறியலிலும் அவர்கள் இறங்கினர்.
பெரிய பள்ளிகளுக்குச் சென்று அதிக செலவு செய்து படிக்க முடியாத ஏழை மாணவ, மாணவியர் தங்களது தாய்மொழியில் இந்தப் பள்ளியில் தரமான கல்வியைக் கற்று வந்தனர்.
இந் நிலையில் இந்த இடத்தை ராமசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்தார். இதைத் தொடர்ந்து பள்ளியைக் காலிசெய்யுமாறு நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
ஆனால், திடீரென சொன்னால் காலி செய்ய முடியாது. கால அவகாசம் தேவை என்று பள்ளி நிர்வாகம்அவரிடம் கோரியது.
அதை ஏற்க மறுத்த ராமசாமி, திடீரென போலீஸார் மற்றும் புல்டோசருடன் பாவாணர் பள்ளிக்கு வந்தார்.அவர்கள் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
பள்ளிக்குள் இருந்த சான்றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி அருகே இருந்த கிணற்றில் வீசினர்.
தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் இறங்கினர்.புல்டோசரைசிறை பிடித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டி வந்தபள்ளியை இப்படி அநியாயமாக இடித்துத் தள்ளியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
போலீஸாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பள்ளிக்கரணை போலீஸார் பொது மக்களை சமாதானப்படுத்தி, நீதிமன்ற உத்தரவு காரணமாகவே பள்ளிஇடிக்கப்பட்டதாக கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டதால் அதில் வேலை பார்த்து வந்த ஆசிரியர்கள், படித்து வந்த மாணவ, மாணவியர்சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications