தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்: தென் மாவட்டங்களில் உஷார் நிலை!
மதுரை:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் கிடைத்திருப்பதால் தென் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்ட ரயில் நிலையங்கள் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையம் தவிர மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. அதேபோல சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றதைத் தொடர்ந்து பெங்களூர், மைசூர் ஆகியநகரங்களிலும் தாக்குதல் நடத்தவிருப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து அந்த நகரங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை தொடங்கி கேரள மாநிலம் கொல்லம் ரயில் நிலையம் வரை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்நிலையங்கள் தவிர ரயில் பாலங்களுக்குக் கீழேயும் போலீஸார் முகாம் அமைத்து பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு உயர் மட்டக்கமிட்டியை அமைத்துள்ளது. பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்து வரும் இந்தக் கமிட்டி தனது அறிக்கையை ஆகஸ்ட் 6ம் தேதிமத்திய அரசிடம் ஒப்படைக்கும் என உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications