தமிழகத்தை தீவிரவாத பகுதியாக அரசு அறிவித்தது செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதையும் தீவிரவாதப் பகுதியாக அறிவித்து அச் சட்டப் பிரிவின் கீழ் நக்கீரன் ஆசிரியர்கோபாலை தமிழக அரசு கைது செய்தது செல்லாது என சென்வை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி எனது அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் கைது செய்தனர்.அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் சில துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்ததாகவும் கூறி கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து என் வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் திடீரென என்னை பொடா சட்டத்தின் 4 (ஏ)பிரிவின் கீழ் கைது செய்தனர்.
அந்த வழக்கு என் மீது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்காகும். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் உள்நோக்கத்துடன்அந்த வழக்கு போடப்பட்டது.
பொடா சட்டம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் யாரும் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என அச் சட்டத்தின் 4 (ஏ)பிரிவு கூறுகிறது. 2002ம் ஆண்டு டிசம்பரில் பொடா சட்டத்தை தமிழக அரசு அமலாக்கி தமிழகம் முழுவதையும் தீவிரவாதப்பகுதியாக அறிவித்தது.
ஒரு பகுதியை தீவிரவாதப் பகுதியாக பிரகனடப்படுத்த வேண்டுமெனில் அந்தப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் இருக்கவேண்டும். ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் சமர்பிக்காமலேயே தமிழகத்தை திடீரென தீவிரவாதப் பகுதியாகஅறிவித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொடா சட்டத்தின் 4 (ஏ) பிரிவை பிரகனடப்படுத்தும் முன் தமிழகம் முழுவதும் ஆய்வுநடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதையும் தமிழக அரசு செய்யவில்லை. இதனால் 2002ம் ஆண்டில் தமிழகம் முழுவதையும்பொடா சட்டத்தின் கீழ் தீவிரவாதப் பகுதியாக தமிழக அரசு அறிவித்தது செல்லாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கோபால் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி மிஸ்ரா, நீதிபதி அசோக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது. இதில் இன்றுதீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பின்படி முறையாக எந்த ஆய்வும் செய்யாமலேயே தமிழக அரசு தன்னிச்சையாகஅறிவிப்பு வெளியிட்டுள்ளது. உரிய ஆய்வே நடத்தாமல் இயந்திரத்தனமாக இந்த அறிவிப்பை தமிழக அரசுபிரகனடப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதையும் தீவிரவாதப் பகுதியாக அறிவித்ததற்கு எந்தக் காரணமும்கூறப்படவில்லை,
இதனால் பொடா சட்டம் பிரிவு 4 (ஏ)வின் கீழ் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என தீர்ப்பளிக்கிறோம். மேலும்கோபால் மீது இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்ததும் செல்லாது.
அதே நேரத்தில் கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர தடை ஏதும் இல்லை என்றனர் நீதிபதிகள்.
இதனால் கோபால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்மீதான பொடா வழக்குகளை விசாரிக்க தடை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடும் என்று தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications