திருவனந்தபுரம்: போலி பாஸ்போர்ட்டுகளுடன் 2 பேர் கைது- தீவிரவாதிகளா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுகளுடன் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகளா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

லண்டனில் நேற்று மீண்டும் நடந்த தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் விமான நிலையங்கள்மற்றும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாகலண்டனிலிருந்து வரும் விமானங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன (லண்டன் குண்டுவெடிப்பைத்தொடர்ந்து..)

இதன்படி திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் மீது விமான நிலைய போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது, இருவரும் போலி பாஸ்போர்ட்டில் லண்டன் செல்லமுயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்து விசாரித்த போது ஒருவரது பெயர் ஜுமர் கான் (வயது 23) என்றும் மற்றொருவரின்பெயர் சையத் தாவூத் ஹஸ்மி (வயது 47) என்றும் தெரியவந்தது.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜுமர் கான் சமீபத்தில் டெல்லி வழியாக இந்தியா வந்துள்ளார். இஸ்ரேலைசேர்ந்த அஷிடோ அலி என்பவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் இந்தியா வந்துள்ளார்.

சையத் தாவூத் ஈரானை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக இவன் டெல்லியில் வசித்து வருகிறார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் முரே என்பவரின் பாஸ்போர்ட்டை மோசடி செய்து அதை தனது பெயரில்மாற்றி தாவூத் பயன்படுத்தி வந்துள்ளார்.

டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் வந்த இருவரும் டோஹா செல்ல டிக்கெட் வாங்கியிருந்தனர்.

இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+