காவிரி: ராஜ்யசபாவைக் கலக்க அதிமுக முடிவு
சென்னை:
காவிரிப் பிரச்சினையை நாடாளுமன்ற மேல் சபையில் (ராஜ்யசபா) பெரிய அளவில் கொண்டு வர அதிமுக முடிவுசெய்துள்ளது.
தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று கோரி அம்மாநில முதல்வர் தரம்சிங்குக்கு முதல்வர்ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதேபோல இப்பிரச்சினையில் தலையிடுமாறு கோரி பிரதமருக்கும் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. ஆனாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடகம் திட்டவட்டமாககூறி விட்டது.
மத்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் திமுக கூட்டணியினர் காவிரிப் பிரச்சினை தொடர்பாக இதுவரை பெரிய அளவில் எதையும்செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் சாலை மறியல், ரயில் மறியல்உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் வந்துள்ளதாகவும், மத்திய அரசிடம்காவிரிப் பிரச்சினை குறித்து கூறியுள்ளதாகவும் பதில் அனுப்பியுள்ளார் சோனியா.
இந்த நிலையில் திமுக கூட்டணியினர் காவிரிப் பிரச்சினை விஷயத்தில் பெரிய அளவில் செயல்பட மாட்டார்கள் என்ற நிலைநிலவுவதால், இப்பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் கவனத்தைதன் பக்கம் திருப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் காவிரிப் பிரச்சினையைபெரிய அளவில் எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.
மக்களவையை (லோக்சபா) பொருத்தவரை அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. ஆனால் மாநிலங்களவையில்(ராஜ்யசபா) அதிமுகவுக்கு கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர். எனவே மாநிலங்களவையில் பெரிய அளவில் பிரச்சினைஎழுப்பி தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் அதிமுக எம்.பிக்கள் அறிவுரை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதிமுகஎம்.பிக்களின் திட்டத்திற்குப் பதிலடியாக திமுக தரப்பும் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இதன் முதல் கட்டமாக திமுக கூட்டணி எம்.பிக்கள், தமிழகத்த்ை சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் சென்று பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து 25ம் தேதி கோரிக்கை மனு கொடுக்கவுள்ளனர்.
அதைத் தெடார்ந்து நாடாளுமன்றத்திலும், அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம் பாஜகவின்தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, காவிரிப் பிரச்சினையில் திமுக, அதிமுகவின்மோதலையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications