சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
லண்டன் நகரில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக சென்னை விமான நிலையத்தில்பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் டெல்லி, மும்பை, சென்னை உட்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர்நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்பேரில் நேற்று முதல் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் கூடுதல் போலீசார் நேற்று முதல் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும்இடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
விமான நிலைய ஓடுபாதை மற்றும் உள் வளாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர்கண்காணிப்பு டவர்கள் மூலம் கவனிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications