சேரன் எக்ஸ்பிரஸ்: தீக்குளித்தவர் கோவை இளைஞர்
சென்னை:
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர் கோவையைச் சேர்ந்தவர் என்றும் சென்னை அருகேபூந்தமல்லியில் அவர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் கழிப்பறையில் ஒரு நபர் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியநிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அந்த நபர் யார் என்பது குறித்து சந்தேகம் எழுந்தது.
கழிப்பறையில் மண்ணெண்ணை வாசம் வீசியதால் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அதனால் ஏற்பட்டதீ தான் ரயிலில் பரவி விபத்தை ஏற்படுத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் குறித்த தீவிர விசாரணை தொடங்கியது. தீவிரவாதியாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்திலும்விசாரணை நடந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தீக்குளித்து இறந்த நபர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. தீக்குளித்து இறந்தவர் கோவை பீளமேடுமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் ரவிக்குமார்.
23 வயதான ரவிக்குமார், டிப்ளமோ என்ஜீனியர். வேலை தேடி சென்னைக்கு வந்த அவர், பூந்தமல்லியில் அறை எடுத்துத்தங்கியிருந்தார். அங்கிருந்து இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பாதிக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்து வந்ததால், ரவிக்குமார் வீட்டுக்குப் பணம் அனுப்புவதில்லைஎனத் தெரிகிறது. இந்த நிலையில் சரியாக வேலைக்குப் போகாமலும் அவ்வப்போது இருந்துள்ளார். இதனால் வேலை போய்விட்டது.
வேலை போன வருத்தத்தினாலும், வீட்டுக்கு என்ன பதில் சொல்வது என்றும் குழப்பமடைந்துள்ளார். இந்த விரக்தியில் தான்தற்கொலை முடிவை எடுத்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி அறையில் வைத்து விட்டுகோவைக்குக் கிளம்பியுள்ளார்.
கையில் மண்ணெண்ணையுடன் கிளம்பிய ரவிக்குமார் ரயில் இருகூரை நெருங்கிய போது கழிப்பறைக்குச் சென்று தற்கொலைசெய்து கொண்டுள்ளார். ரவிக்குமாரின் தந்தை சின்னப்பனை போலீஸார் பூந்தமல்லி அழைத்து வந்து கடிதத்தில் உள்ளதுரவிக்குமாரின் கையெழுத்து தானா என்பது குறித்து விசாரித்துள்ளனர்.
அவர், அது ரவிக்குமாரின் கையெழுத்து தான், தற்கொலைசெய்து கொண்டது தனது மகன் தான் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இறந்தது ரவிக்குமார் தான் என்பது உறுதியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications