திருப்பூரில் பந்த்: திமுக கூட்டணி முடிவு!
திருப்பூர்:
சாயப்பட்டறைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக திருப்பூர் நகரில் முழு அடைப்பு நடத்த திமுக கூட்டணிக்கட்சிகளும், சாயப்பட்டறை அதிபர்களும் முடிவு செய்துள்ளனர்.
அத்தோடு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்இப்பிரச்சினை குறித்து விவாதிக்க திருப்பூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.
திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. இதில் திமுக, மதிமுக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இப்பிரச்சினையை மத்திய அரசிடம் கொண்டு சென்று,நவீன சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மத்திய அரசின் உதவியைக் கோருவது என்றும், இந்தப் பிரச்சினையில் உதவிக்குவராமல் மெளனம் சாதிக்கும் மாநில அரசைக் கண்டித்து பந்த் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
26ம் தேதி காலை 6 மணி முதல் 27ம் தேதி காலை 6மணி வரை 24 மணி நேர முழு அடைப்பு நடத்ததீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications