தீவிரவாதிகளின் அடுத்த குறி பெங்களூர்?
பெங்களூர்:
லண்டன் மற்றும் எகிப்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்என்று தகவல் வெளியாகியுள்ளதால் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா இயக்கதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களின் பட்டியலில் பெங்களூர் நகரம் முதலிடத்தில் இருப்பதாகவும்கூறப்படுகிறது.
இந்தியாவில் பெங்களூர் நகரம் வேகமாக வளர்ந்துத வரும் நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு உலகின் முன்னணிசாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் சட்டசபைக் கட்டிடமான விதான் செளதா, எச்ஏஎல் விமான தயாரிப்பு நிறுவனம் உட்பட முக்கிய நிறுவனங்கள் உள்ளன.எனவே பெங்களூரில் தாக்குதல் நடத்துவதின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என்றுதீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து பெங்களூர் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விதான் செளதா, முன்னணிசாப்ட்வேர் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் தரம்சிங் கூறுகையில், பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அடிக்கடி தகவல்கள்வெளியாகின்றன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications