குடிபோதையில் துன்புறுத்தல்; பாகனைக் கொன்றது யானை
நான்குநேரி:
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே குடிபோதையில் தாறுமாறாக அடித்து கொடுமைப்படுத்திய பாகனை, யானைதூக்கி வீசி அடித்துக் கொன்றது.
கோவில் அருகே யானையை நிறுத்தி வைத்து விழாவுக்கு வந்த பக்தர்களிடம், யானையை ஆசிர்வதிக்கச் செய்து காசுவசூலித்தார். அதன் பின்னர் யானையுடன் ஊர் திரும்புவதற்காக கிளம்பினார்.
மூலைக்கரைபட்டி என்ற ஊருக்கு வந்தபோது அங்குள்ள மதுக் கடை அருகே யானையைக் கட்டிப் போட்டு விட்டு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினார். நன்றாக போதை ஏறிய நிலையில் யானையிடம் வந்த திருவேங்கடத்தான்,
மூலைக்கரைபட்டியில் உள்ள கடை வீதிகளில் யானையை வைத்து பிச்சை எடுக்கலாம் என்ற யோசனையுடன் ஊருக்குப்போகும் திட்டத்தைக் கைவிட்டு யானையை கடை வீதிக்கு திருப்பினார்.
யானையால் போக முடியாத குறுகிய சந்துகளுக்குள் எல்லாம் யானையை செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். கம்பால்யானையை அடித்தும், காயம் ஏற்படும் அளவுக்கு துன்புறுத்தியும் கடைகளில் காசு வாங்க வைத்துள்ளார் திருவேங்கடத்தான்.
திருவேங்கடத்தானின் கொடுமையை சகித்து வந்த யானை ஒரு கட்டத்தில் கோபத்தில் கொந்தளித்தது. தனது துதிக்கையால்திருவேங்கடத்தானை தூக்கிய யானை, அங்கிருந்த மின் கம்பத்தில் தூக்கி அடித்தது.
சரமாரியாக அடித்தும் வெறி தணியாத யானை அவரை அப்படியே தூக்கி அருகில் இருந்த சாக்கடையில் வீசி எறிந்தது.படுகாயம் அடைந்த பாகனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆயினும்திருவேங்கடத்தான் பரிதாபமாக இறந்தார்.
யானையின் கொந்தளிப்பைப் பார்த்த மூலைக்கரைப்பட்டி மக்கள் பீதியடைந்து ஓடினர். யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் எனஅவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் இன்னொரு பாகனுடன் அங்கு விரைந்து சென்று யானையை அடக்கி கட்டிப் போட்டனர்.திருவேங்கடத்தான் மீதிருந்த கோபம் காரணமாகவே யானை கோபமடைந்து அவரை தூக்கி வீசிக் கொன்றதாக கால்நடைமருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications