காவிரி: பிரதமரை நாளை சந்திக்கிறார் ஜெ.- திமுக கூட்டணி இன்று சந்திப்பு
சென்னை:
தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை நேரில்சந்தித்து கோரிக்கை விடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. போதுமான அளவு நீர் இருந்தும் தமிழகத்திற்குதண்ணீர் திறந்து விடாமல் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் விடுவித்து வருகிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். திமுகதலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்து காவிரி நீர்ப் பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். தமிழகத்திற்குரிய நீரை திறந்து விடுமாறுகர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
காவிரி நீர் இல்லாததால் காவிரி பாசனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாயிகள் அடைந்துள்ள துயரங்களையும்அவர் புள்ளி விவரங்களுடன் பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளார்.
ஜெயலலிதாவுடன் தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் டெல்லி செல்கிறது.
திமுக குழுவினர் இன்று சந்திப்பு:
இதற்கிடையே, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக கூட்டணித்தலைவர்கள் இன்று சந்தித்து மனு கொடுக்கிறார்கள். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications