காஜா மைதீன் புகாருக்கு பைனான்சியர் மறுப்பு!
சென்னை:
தயாரிப்பாளர் காஜா மைதீனின் வீட்டை நான் ஏமாற்றி அபகரிக்கவில்லை. அவரது பணத்தையும் நான் மோசடிசெய்யவில்லை. என் மீது காஜா மைதீன் அபாண்டமாக புகார் கூறுகிறார் என்று பைனான்சியர் சுபாஷ் நஹர் கூறியுள்ளார்.
அவரிடம் கொடுத்திருந்த ரூ. 2 கோடி பணத்தையும் மோசடி செய்து விட்டதாக காஜா மைதீன் கூறியிருந்தார். இதுதொடர்பாகசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்து புகார் மனுவும் கொடுத்தார்.
இந் நிலையில் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆழ்வார்ப்பேட்டையில்வசித்துவருகிறேன். நீண்ட காலமாகவே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை என் மீது எந்தபுகாரும் வந்ததில்லை.
காஜா மைதீன் பொய்யான தகவலை சொல்லி வருகிறார். அவர் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கவும் இல்லை. நான் அவரதுவீட்டை அபகரிக்கவும் இல்லை. அன்னக்கிளி என்பவர் தான் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தைதிருப்பிச் செலுத்த முடியாததால் அவரது வீட்டை என்னிடம் விற்றார்.
கடன் தொகை போக மீதப் பணத்தை நான் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த இடத்திற்கும், காஜாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. வேட்டையாடு விளையாடு படத்திற்காக காஜா மைதீன் என்னிடம் ரூ. 3 கோடி கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு முறையாக வட்டி கூட அவர் செலுத்தாமல் உள்ளார். இந் நிலையில் என் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்திவருகிறார். அவர் மீது நானும் கமிஷனரிடம் புகார் கொடுக்கவுள்ளேன். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளேன் என்றார்நஹர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications