நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு: மக்கள் ஓட்டம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துஓடினர்.
இந்த நில நடுக்கத்தால் சென்னையில் நேற்று இரவு மக்களிடையே பீதி ஏற்பட்டது. பலர் வீடுகளில் உறங்காமல் தெருக்களிலும்,சாலையோரங்களிலும் படுத்து இரவை கழித்தனர்.
இந் நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.இரவு 1 மணியளவில் கடல் நீர் பொழிமுகத்தை தாண்டி கால்வாய் வழியாக ஊருக்குள் புகுந்தது.
இங்குள்ள அரியபெருமாள்விளை காலனி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள்உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் நீர் இன்றும் தொடர்ந்து ஊருக்குள் வந்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் பெரும் பீதிஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தமாதத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம் தான். எனவே பொதுமக்கள் மீண்டும் சுனாமி வருமோ என்று அச்சமடையதேவையில்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications